Intra உங்களுக்கு இவற்றையெல்லாம் வழங்குகிறது:
பாதுகாப்பான, வெளிப்படையான
இணைய அணுகல்.

செய்தித் தளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மெசேஜிங் ஆப்ஸிற்கான அணுகலைத் தடுத்து பாதிப்பை ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சைபர் தாக்குதலான DNS அச்சுறுத்தலில் இருந்து Intra உங்களைப் பாதுகாக்கிறது.

INTRA பெறுக

01

more open internet access

மேலும் திறந்த இணைய அணுகல்

ஆன்லைன் தணிக்கையின் மிகவும் பொதுவான வழிகளில் ஒன்றான DNS மாற்றியமைத்தல் என்னும் நுட்பத்தால் தடுக்கப்பட்ட இணையதளங்கள் மற்றும் ஆப்ஸை அணுக Intra உங்களை அனுமதிக்கிறது.

02

protection from digital attacks

டிஜிட்டல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு

ஃபிஷிங் மற்றும் மால்வேர்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க Intra உதவுகிறது. இந்தத் தாக்குதல்கள் பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடவோ போலி இணையதளங்களுக்கு உங்களைத் திசைதிருப்புவதன் மூலம் உங்கள் சாதனத்தில் மென்பொருளை நிறுவவோ பயன்படுத்தப்படுகின்றன.

03

unlimited protection with one click

ஒரே கிளிக்கில் வரம்பற்ற பாதுகாப்பு

Intra பயன்படுத்துவது மிக எளிது — அதை ஆன் செய்துவிட்டால் போதும். வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. Intra உங்கள் இணைய இணைப்பின் வேகத்தைக் குறைக்காது. அத்துடன் டேட்டா பயன்பாட்டிற்கும் வரம்பு இல்லை.

04

technology you can trust

நீங்கள் நம்பக்கூடிய தொழில்நுட்பம்

Intra உங்கள் தகவலை தனிப்பட்டதாக வைத்திருக்கிறது. நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் அல்லது நீங்கள் பார்வையிடும் இணையதளங்களை நாங்கள் டிராக் செய்ய மாட்டோம்.

உங்கள் DNS சேவையக வழங்குநரைப் பிரத்தியேகமாக்க Intra உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் உங்கள் சொந்த சேவையகத்தைப் பயன்படுத்தலாம் அல்லது Cloudflare அல்லது Google போன்ற பிரபலமான வழங்குநர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

இது செயல்படும் விதம்

Intra உங்கள் இணைய இணைப்பை பொது டொமைன் பெயர் சிஸ்டம் (DNS) சேவையகத்தில் என்க்ரிப்ட் செய்கிறது. DNS சேவையகங்கள் ஒரு தொடர்புப் பட்டியல் போல் செயல்படுகின்றன - நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது, இணையதளத்தைப் பார்வையிட அல்லது ஆப்ஸைப் பயன்படுத்தத் தேவையான சரியான முகவரிகளை உங்கள் DNS சேவையகம் வழங்குகிறது.

இருப்பினும், அணுகலைத் தடுக்க அல்லது போலி இணையதளங்களுக்கு உங்களைத் திருப்பிவிட DNS சேவையகங்களை மாற்றலாம். உங்கள் Android சாதனத்தில் DNS சேவையகங்களுடனான உங்கள் இணைப்பை என்க்ரிப்ட் செய்வதன் மூலம், முடிவுகளைத் தவறான வழியில் மாற்றியமைக்க முடியாதபடி பார்த்துக்கொள்ள Intra உதவுகிறது, எனவே நீங்கள் பாதுகாப்பாக இணையத்தை அணுகலாம்.

Android 4.0 மற்றும் அதற்குப் பிறகான பதிப்புகளில் Intra செயல்படும். சில வினாடிகளிலேயே பயன்படுத்தத் தொடங்கலாம்.